செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

குமரி ஆதவன்

நண்பர் குமரி ஆதவன் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்க வில்லை என்ற குறையினை போக்க நண்பர்களின் வேண்டுகோளின்படி என்னிடம் இருந்த புகைப்படங்களை இங்கு பதிவேற்றியுள்ளேன்...

குமரி ஆதவன்

குமரி ஆதவன் மேடை பேச்சின் போது...

குமரி ஆதவன்

சிறந்த படைப்பாளர் விருது பெற்றபோது...

இலங்கை பயணத்தின் போது

குமரி ஆதவன் உடன் அவரது துணைவியார்

வியாழன், 7 ஜூன், 2012


(அமுதம் ஜூன் 2012 ஆசிரியர் உரை)

   சென்ற சில வாரங்களாக நாளிதழ்களை புரட்டினால் பக்கத்திற்கு பக்கம் அரசின் சாதனைகள் முழு பக்க விளம்பரங்களாக இடம்பெற்றிருப்பதை பார்க்க முடிந்தது. அவற்றை பார்க்கும் போதெல்லாம் ‘சாதனை என்ற சொல்லைப் பற்றிய எண்ணம் மனதில் ஓட ஆரம்பித்தது.
   ஒருவர் தான் செய்யும் வேலையையும், கடமையையும் சாதனை என்று கூறிக்கொள்ள முடியாது என்பது என் எண்ணம். ஒரு மருத்துவர் தான் இதுவரை மருத்துவம் பார்த்து குணமடைந்தவர்களின் பட்டியலை வைத்துக் கொண்டு பெருமையடித்துக் கொள்ள கூடாது. காரணம் நோய்க்கு சிகிட்சை அளிப்பது அவர் படித்த படிப்பிற்கான பணி.
   ஒரு சாதனை என்பது காலத்தால் அழியாததாக, வரலாறு பேசும்படியானதாக இருக்க வேண்டும். இது போன்ற விளம்பரங்கள் வருங்கால சந்ததியரிடம் தவறான குறிக்கோளை ஏற்படுத்திவிடுமோ என்பதே என் அச்சம்.
   உலகம் முழுவதும் பல இலட்சம் அல்லது கோடி மருத்துவர்கள் இருக்கலாம். அவர்களைப் பற்றி அதிகம் அறிந்திராத உலகம், அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த லூயி பாயிஸ்டரை நினைவில் வைத்துள்ளது. காரணம், அவர் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது அவரது கடமையாக இருக்கவில்லை. யாரும் தூண்டவும் இல்லை. அவராக சொந்த முயற்சியால் இதை செய்தார்.
   எனவே, சிந்தியுங்கள் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் நாளைய வரலாறாக வேண்டுமா?  அல்லது காலத்தால் மறக்கப்படும் ஒரு சாதாரண தொழிலாளி ஆக வேண்டுமா. (அதாவது மருத்துவர், பொறியாளர், அரசு ஊழியர் என பல பணிநிலைகளில்).
   முயன்று உழைத்தால் சாதனைகள் படைக்க இந்தியாவில் அத்தனை துறைகளும் சாதனையாளர்களை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது. எனவே முயல்வோம் சாதிப்போம். நன்றி...


(      சாதனை புரிய பிள்ளையை, உடன்பிறப்பை, நண்பர்களை எப்போதாவது எல்லோரும் தூண்டி இருப்போம், அல்லது தூண்டிக் கொண்டிருப்போம். அத்தகைய சூழ்நிலையில் பத்திரிகைகளில் வெளிவரும் மேற்கூரிய விளம்பரங்கள் எது சாதனை என்பதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. குழம்பிபோகும் பிள்ளைகளும், பெற்றோரும் உப்புக்கும் உதவாத செயல்களை சாதனை என கூறித்திரிகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை மனதில் கொண்டே மேற்கண்ட ஆசிரியருரையை எழுதினேன்.    )

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சிந்திப்போம்...
ரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் காலடி வைத்துவிட்டோம், இன்னும் இரண்டே ஆண்டுகள் தாம் உலகம் அழிவதற்கு. அப்போது எப்படி எல்லாம் இருக்கும் கற்பனை செய்துள்ளனர் ஆங்கில திரை உலகினர். அதுதான் தமிழில் ‘ருத்ரம்’ என்ற பெயரில் சக்கை போடு போடுகிறது. பணம் சம்பாதிக்க மனிதர்களின் பய உணர்வும் பயன்படுகிறது என்பதை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது.
யாரோ விஞ்ஞானிகளா? அல்லது புரளி வெறியர்களா? என்று தெரியாத சிலர் பரப்பிவிட்ட உலக அழிவு கதை இப்போது மனிதர்களை பாடாய் படுத்துகிறது. 2012 - ல் உலகம் அழிவது இருக்கட்டும், முதலில் நாளை காலை சூரிய உதயத்தை பார்க்க நான் படுக்கையிலிருந்து எழும்புவேனா? என்று ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் இவ்வுலகிற்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமைகள் கண்முன் நிற்காதா என்ன? அப்படி நாம் கடமைகளை உணர்ந்து விட்டால் இவ்வுலகை அழிவிலிருந்து காக்கலாம் தானே!
கிளை நுனியில் அமர்ந்துக் கொண்டு அடிமரத்தை வெட்டிக் கொண்டிருக்கும் நாம் இந்த பூமிக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாய் பரந்து கிடக்கிறது. இந்த புத்தாண்டில் நாம் வாழ்கிறோமோ இல்லையோ? நம் சந்ததியினர் துன்பமின்றி வாழ “நல்லதொரு பூமி செய்வோம்” என்ற உறுதி மொழியை ஏற்போம்.
சுற்றுப்புற சுகாதாரம் காப்போம், புவி வெப்பமடைதலை தவிர்ப்போம். நன்றி

(2010 ஜனவரி அமுதம் மாத இதழ் ஆசிரியர் உரையாக வெளிவந்தது)

வியாழன், 17 டிசம்பர், 2009

வணக்கம்

அமுதம் மாத இதழின் சார்பாக இந்த வலை பூ துவங்கப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து படைப்புகள் இதில் வெளி வரும்

ஜி.எ.பிரிட்டோ.