சிந்திப்போம்...
இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் காலடி வைத்துவிட்டோம், இன்னும் இரண்டே ஆண்டுகள் தாம் உலகம் அழிவதற்கு. அப்போது எப்படி எல்லாம் இருக்கும் கற்பனை செய்துள்ளனர் ஆங்கில திரை உலகினர். அதுதான் தமிழில் ‘ருத்ரம்’ என்ற பெயரில் சக்கை போடு போடுகிறது. பணம் சம்பாதிக்க மனிதர்களின் பய உணர்வும் பயன்படுகிறது என்பதை நினைக்கும் போது சிரிப்புதான் வருகிறது.
யாரோ விஞ்ஞானிகளா? அல்லது புரளி வெறியர்களா? என்று தெரியாத சிலர் பரப்பிவிட்ட உலக அழிவு கதை இப்போது மனிதர்களை பாடாய் படுத்துகிறது. 2012 - ல் உலகம் அழிவது இருக்கட்டும், முதலில் நாளை காலை சூரிய உதயத்தை பார்க்க நான் படுக்கையிலிருந்து எழும்புவேனா? என்று ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் இவ்வுலகிற்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமைகள் கண்முன் நிற்காதா என்ன? அப்படி நாம் கடமைகளை உணர்ந்து விட்டால் இவ்வுலகை அழிவிலிருந்து காக்கலாம் தானே!
கிளை நுனியில் அமர்ந்துக் கொண்டு அடிமரத்தை வெட்டிக் கொண்டிருக்கும் நாம் இந்த பூமிக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாய் பரந்து கிடக்கிறது. இந்த புத்தாண்டில் நாம் வாழ்கிறோமோ இல்லையோ? நம் சந்ததியினர் துன்பமின்றி வாழ “நல்லதொரு பூமி செய்வோம்” என்ற உறுதி மொழியை ஏற்போம்.
சுற்றுப்புற சுகாதாரம் காப்போம், புவி வெப்பமடைதலை தவிர்ப்போம். நன்றி
(2010 ஜனவரி அமுதம் மாத இதழ் ஆசிரியர் உரையாக வெளிவந்தது)